ஐ.பி.எல் கிரிக்கெட் – டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயர் மாறியது!
ஐபிஎல் தொடரில் இடம்பிடித்திருந்த 8 அணிகளில் ஒன்று டெல்லி டேர்டெவில்ஸ். ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008-ல் இருந்து இந்த அணி கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதுவரை 11 தொடரில் விளையாடி டெல்லி டேர்டெவில்ஸ் அணி பெரிய அளவில் சாதித்தது கிடையாது.
என்றாலும் உரிமையாளர்கள் அணியை சிறப்பாக கொண்டு சென்றார்கள். ஜிண்டால் சவுத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் டெல்லி அணியின் 50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஜிஎம்ஆர். குரூப் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்போட்ர்டஸ் ஆகிய நிறுவனங்கள் டெல்லி அணியின் உரிமையாளராக இருக்கிறது. வருகிற 18-ந்தேதி ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த அணியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்போது, டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயருக்குப் பதிலாக டெல்லி கேபிடல் அல்லது டெல்லி கேபிடல்ஸ் என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை வைக்க ஆலோசிக்கப்பட்டது. முடிவில் டெல்லி கேபிடல்ஸ் என புதிய பெயர் வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்துள்ளது.