Tamilசினிமா

‘மாமன்னன்’ படத்தில் இணைந்தார் நடிகர் பகத் பாசில்

பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. அந்த வரிசையில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் ‘சேத்துமான்’ படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிந்து மாலினி இசையமைத்திருந்தார். கிராமத்து தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை விவரிக்கும் கதைக்களமாக இப்படம் அமைந்தது.

அண்மையில் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக ‘சேத்துமான்’ திரைப்படம் தேர்வாயிருந்தது. அதேபோல தமிழ்நாட்டில் நடந்த 19-வது சென்னை திரைப்பட விழாவில் இப்படம் இரண்டாவது விருதைப்பெற்றது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்த படம் வருகின்ற மே மாதம் 27-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.