தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்தது
சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 38 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 472 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் 38 ஆயிரத்து 296 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 787 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளி விலை ஒரு கிராம் 64 ரூபாய் 80 பைசாவாக விற்பனையாகிறது.