மீன் குழம்பு உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் – அமைச்சர் மீனா பேச்சு
ஆந்திர மாநில மீன்வளத்துறை சார்பில் திருப்பதி மாவட்டம் வடமாலா பேட்டையில் அரசு சில்லறை விலையில் மீன் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அமைச்சர் நடிகை ரோஜா திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் மீன் ஏற்றுமதியில் 40 சதவிதம் ஆந்திராவில் இருந்து தான் ஏற்றுமதி ஆகிறது என்பது பெரிய விஷயம். நமது மாநிலத்தில் உள்ள மீன் உற்பத்தியாளர்கள் மீன் வளர்ப்பு தொழில் வல்லுநர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோர் ஆந்திர மாநில அரசு மூலம் பெறும் அளவில் பயன் அடைந்து வருகின்றனர்.
விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கடல் உணவுகளில் ஒன்றான மீன் உற்பத்தி மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும்.
அதற்காக மீனவர்கள், விவசாயிகளுக்கு அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
கடல் மீன் குழம்பு உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். பொதுமக்கள் அதிக அளவில் மீன் சாப்பிடலாம். தற்போது புதிதாக திறக்கப்பட்ட வடமாலா பேட்டை அரசு மின் விற்பனை நிலையத்தில் தரமான மீன்கள் குறைந்த விலையில் கிடைக்கும். மீனவர்கள் சார்பாக முதல் மந்திரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.