Tamilவிளையாட்டு

விதிகளை மீறிய டெல்லி அணி வீரர் பிரித்வி ஷாவுக்கு அபராதம்

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் புனே நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று  நடைபெற்ற  45-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
இதில் 6 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

இந்த  ஆட்டத்தில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி அணி தொடக்க வீரர்  பிரித்வி ஷா-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி போட்டி கட்டணத்தில் 25 சதவீதத்தை அபராதமாக அவர் செலுத்த வேண்டும். நடத்தி விதிகளின் படி குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதுடன் அனுமதியை ஏற்றுக் கொண்டதாகவும் ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.