Tamilசினிமா

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘மாமனிதன்’. இந்த திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர்
ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

தர்மதுரை படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும்
கவர்ந்தது. மாமனிதன் திரைப்படம் வருகிற மே மாதம் 20ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது. அதன்படி இப்படம்
மே மாதம் 10ம் தேதியிலிருந்து, ஜூன் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.