Tamilசெய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோ படைடனுக்கு உக்ரை அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் அந்நாட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
தெரிவித்தார்.

இந்நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவிதுள்ளார்.