Tamilசெய்திகள்

சோனியா காந்தியை சந்தித்து பேசிய மகாராஷ்டிரா எம்.எல்.ஏ-க்கள் குழு

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை டெல்லியில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குழு சந்தித்து பேசியது.

மகாராஷ்டிரா கட்சித் தலைமை தங்களை புறக்கணிப்பதாக சோனியாகாந்தியிடம் எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சட்டசபை காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது, தொகுதி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி கிடைக்காது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சோனியா காந்தியிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுப்பி உள்ளனர்.

எம்.எல்.ஏ.க்கள் தங்களது புகார்களை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு அப்போது சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவை சேர்ந்த பல்வேறு கட்சி எம்எல்ஏக்களுக்கு டெல்லியில்
சரத்பவார் விருந்தளித்த நிலையில், அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சோனியாகாந்தியை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் மற்றும் மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணகவுடா பாட்டீல் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.