Tamilசெய்திகள்

காவல் உதவி செயலலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழக காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட காவல் உதவி செயலியை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த செயலியில், பொது மக்களின் பயன்பாட்டிற்காக “அவசரம்” உதவி பொத்தான் பெண்கள் மற்றும் இதர பயனாளர்கள் அவசர காலங்களில் இச்செயலியில் உள்ள சிவப்பு நிற “அவசரம்“ என்ற
பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் குறுகிய அளவிலான வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு துரித சேவை வழங்கப்படும்
வகையில் வடிவமைக்கபபட்டுள்ளது.

மேலும், அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (டயல் 112, 100, 101) ஆகிய எண்கள் மூலம் பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்கும் பொருட்டு. “டயல் 100” செயலியானது “காவல்
உதவி” செயலியின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து அழைப்பதன் மூலம், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் பெறப்பட்டு துரித
சேவை வழங்கப்படும்.

அதேப்போல், அலைபேசி வழி அவசர கால கோரிக்கை, புகார் அளித்தல், பயனாளர்கள் குறிப்பாக மகளிர், சிறார்கள், முதியோர்கள், ஆகியோர் அவசரகால கோரிக்கைகள், புகார்களை நேரடியாக
தேர்வு செய்து உரிய விவரங்களுடன் புகார் தொடர்பான படங்கள், குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றும் செய்தும் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக துரித சேவை பெறலாம்.

இருப்பிட விவர பரிமாற்ற சேவைவசதி, அவசரமற்ற காலங்களில் பயனாளர்கள், வாட்ஸ் அப், கூகுள் மேப் வாயிலாக, பணி, இதர பயணங்கள் செல்லும் பொழுது, நேரடி இருப்பிட விவரங்களை
நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் பயனாளர்களின் உறவினர்கள், நண்பர்கள் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, அவர்களின்
பாதுகாப்பு உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.