மும்பை அணியில் இணைந்த சூர்யகுமார் யாதவ்
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனையும், வழக்கம்போலவே தோல்வியுடன் தான் தொடங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் காயம் ஏற்பட்டது. அதனால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில்
சிகிச்சையும் பயிற்சியும் எடுத்து வந்தார்.
காயத்திலிருந்து மீண்டு அண்மையில் மும்பை சென்றடைந்தார். ஆனால் 3 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், அதை முடித்துவிட்டு மும்பை அணியுடன் தற்போது இணைந்து
உள்ளார்.
இதனை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஜாகீர்கான் உறுதிப்படுத்தியுள்ளார்.