Tamilசினிமா

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் வெங்கட் பிரபு

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மன்மத லீலை’. வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக்
செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மணிவண்ணன் எழுதியுள்ளார். இந்த படத்தின் கதை ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இரண்டு
வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றியது என்றும் இயக்குனர் பாக்கியராஜின் ‘சின்ன வீடு’ திரைப்பட பாணியில் இருக்கும் என்றும் படத்தின் கதை குறித்து
வெங்கட் பிரபு கூறியிருந்தார். பிரேம் ஜி இசையமைத்துள்ள இப்படத்தை ராக்ஃபோர்ட் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படம் இன்று (01.04.2022) திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. மன்மதலீலை படத்தை பார்ப்பதற்கு காலையிலேயே ரசிகர்கள் கூடியிருந்த நிலையில் தொழில்நுட்ப
கோளாறு காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டது. இந்நிலையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டு மன்மதலீலை படம்
வெளியாகியுள்ளதாகவும் அத்துடன் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டும் இயக்குனர் வெங்கட் பிரபு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.