ஆதி – ஹன்சிகா நடிக்கும் ‘பார்ட்னர்’! – பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
நடிகர் ஆதி தற்போது அறிமுக இயக்குனர் மனோ தாமோதரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ஹன்சிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆதிக்கு ஜோடியாக ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தில் நடித்த பாலக் லல்வானி நடிக்கிறார்.
இந்த படத்திற்கு ‘பாட்னர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்தில் நடிகர் பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தில் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு ஆகியோர் கடத்தல்காரர்களாக நடிக்கின்றனர். இந்த படத்தை ராயல் பர்சுனா கிரியேசன்ஸ் தயாரிக்கிறது. மேலும் படத்திற்கு ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.