விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ பட அறிவிப்பு இன்று வெளியாகிறது
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது.
அதன்பின்னர் மீண்டும் இந்த கூட்டணி புதிய படத்தில் ஒப்பந்தமாகிவுள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் 14:20 மணிநேரம் – 19.0760° N, 72.8777° E – அடுத்த மிஷன் வெளியீடு என்று குறிப்பிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.