ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் விரைவில் இந்தியா வருகை
உக்ரைன் – ரஷியா போர் நீடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு வெளிநாடுகளின் முக்கிய அதிகாரிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் விரைவில் இந்தியா வரவுள்ளார் என தகவல்கள் வெளியானது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்கும் விவகாரத்தில் எந்த பண மதிப்பில் இருநாடுகளும் வர்த்தகம் செய்யும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சமீபத்தில் சீன வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.