Tamilவிளையாட்டு

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து, பிரனோய்

 

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீரர் எச்.எஸ்.பிரனோய் (வயது 29) ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தல் பிரனோய், இந்தோனேசிய வீரர் சினிசுகா கின்டிங்கை 21-19 19-21 21-18 என்ற செட்கணக்கில் தோற்கடித்தார்.

2017ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் வெற்றி பெற்ற பிரனோய், அதன்பின்னர் இந்த போட்டியில்தான் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சக வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அல்லது இந்தோனேசிய வீரர் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதுவார்.

இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் சுபநிதா கேட்டோங்கை 18-21, 21-15, 19-21 என்ற செட்கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை பூசனனுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார் சிந்து.