நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி – இந்தியா, பக்ரைன் அணிகள் நாளை மோதல்
2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் வரும் ஜூன் மாதம்
தொடங்குகின்றன.
இதில் பங்கேற்பதற்கு பயிற்சி பெறும் வகையில், பக்ரைன், மற்றும் பெலாரஸ் கால்பந்து அணிகளுடன் இந்திய அணி நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாடுகிறது.
பக்ரைன் தலைநகர் மனமாவில் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி பக்ரைன் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 26-ந் தேதி நடைபெறும் போட்டியில் பெலாரஸ் அணியுடன் இந்தியா
விளையாடுகிறது. இரண்டு போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும்.
இந்த போட்டிகளில் பங்கேற்கும் 25 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 7 வீரர்கள் இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்திருப்பவர்கள். பிராப்சுகான் கில்,
ஹோர்மிபாம் ரிவாக், அன்வர் அலி, ரோஷன் சிங், சுஹைர், டானிஷ் பாரூக், அன்கெட் யாதவ் ஆகியோர் புதுமுக வீரர்களாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.