Tamilசெய்திகள்

தங்கத்தின் விலை உயர்வு! – ஒரு சவரனுக்கு ரூ.376 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,663 ஆக இருந்தது. இன்று இது ரூ.4,710 ஆக அதிகரித்து உள்ளது.

ஒரு பவுன் தங்கம் ரூ.37,304-ல் இருந்து 37,680 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் தங்கம் விலை கிராம் 47 ரூபாயும் பவுன் 376 ரூபாயும் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை கிராம் ரூ.67.90-ல் இருந்து 68 ரூபாயாகவும், கிலோ ரூ.67,900-ல் இருந்து ரூ.68 ஆயிரமாகவும் உயர்ந்து உள்ளது.