Tamilவிளையாட்டு

இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் – வெற்றியை நோக்கி இங்கிலாந்து

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 336 ரன்களும், இலங்கை 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 69.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 327 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை தாரைவார்த்து 53 ரன்களுடன் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதில் மேத்யூஸ் (5 ரன்), கருணாரத்னே (23 ரன்) ஆகியோர் அவுட் ஆனதும் அடங்கும். 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 274 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட் மட்டுமே உள்ளது. அதனால் இந்த டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெறவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *