‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி ரிலீஸ்
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.’ பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த ஜனவரி 7-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டால் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் மார்ச் 18-ம் தேதி அல்லது ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளதால் இப்படம் மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.