Tamilசெய்திகள்

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதித்தவர்கள் எண்னிக்கை 4,461 ஆக உயர்வு!

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் தொற்றால் கொரோனா 2-வது அலை உருவானது. தற்போது ஒமைக்ரான் வைரசால் 3-வது அலை உருவாகியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உச்சத்தை தொடும் நிலையில் உள்ளது.

இதற்கிடையே ஒமைக்ரான் தொற்றும் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 4,461 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 4,868 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் தொற்றில் இருந்து 1805 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 645 பேர், டெல்லியில் 546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.