Tamilவிளையாட்டு

மிட்செல் ஸ்டார்க்குடன் விராட் கோலியை ஒப்பிட்ட தொலைக்காட்சிக்கு வாசிம் ஜாபர் பதிலடி

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி. இந்த தலைமுறையின் தலைசிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமாக அடித்துக் கொண்டிருந்த விராட் கோலிக்கு 2019-ல் ‘பிரேக்’ ஏற்பட்டது.

அதன்பின் இன்னும் சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். சராசரி மிகவும் குறைவாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான சிட்னி டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.

இதனைத்தொடர்ந்து விளையாட்டு போட்டியை ஒளிபரப்பும் ஆஸ்திரேலிய டி.வி. 2019-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க்கின் சராசரி 38.63. விராட் கோலியின் 37.17 என குறிப்பிட்டு, விராட் கோலியை குறைத்து மதிப்பிட்டிருந்தது.

இதையறிந்த இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் குவித்தவருமான வாசிம் ஜாபர், ஒருநாள் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியின் சராசரி 5.350. அதேவேளையில் ஸ்டீவ் ஸ்மித்தின் சராசரி 43.34 என பதிலடி கொடுத்துள்ளார்.