மீண்டும் பள்ளி மாணவனாக நடிக்கும் தனுஷ்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் வாத்தியாராக நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவராக தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.