நட்டி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
விஜய் நடிப்பில் வெற்றிப்பெற்ற யூத் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பிறகு நடிகராக வலம் வருபவர் நடிகர் நட்டி என்னும் நட்ராஜ். இவர் சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். காவல்துறை அதிகாரியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இப்பொழுது அதே பாணியில் காவல்துறை அதிகாரியாக நட்டி நட்ராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமாகி இருக்கிறது. எஸ்.ஜே.எஸ். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சாய் சரவணன் தயாரிப்பில் இந்த பெயரிடப்படாத புதிய படம் தயாரிக்கப்படுகிறது.
இந்தப் படத்தை கே.பி.தனசேகர் இயக்குகிறார். இப்படத்தின் முக்கிய வேடங்களில் ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் போன்ற பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் காட்சிகள் அந்தமானில் உருவாகி வருகிறது.