திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலைய கொள்ளை சம்பவம் – ரெயில்வே ஊழியர் கைது
திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் நேற்று ரூ. 1.32 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
விசாரணையில், அதிகாலை 4 மணியளவில் ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி, கட்டிப்போட்டு பணம் கொள்ளை போனது என தெரிய வந்தது.
திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ரயில்வே ஊழியரே ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. டிக்கெட் கவுன்டருக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்ததாக அவர் நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது.
மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மனைவியை வரவழைத்து பணத்தை கொடுத்து விட்டு கொள்ளை போல நாடகம் ஆடியது தெரிவந்துள்ளது.
விசாரணைக்கு பின் ரயில்வே ஊழியர் டீக்கா ராமை போலீசார் கைது செய்தனர்