Tamilசினிமா

ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ராதே ஷியாம் பட டிரைலர்

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ‘ராதே ஷியாம்’ படம் மூலம் மீண்டும் ஒரு காதல் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று டிரைலர் சூப்பர் ஹிட் ஆனது.

பிரபாஸுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இடையிலான காதல் தான் படத்தின் முக்கிய அம்சமாக டிரைலரில் உள்ளது. இவர்களின் காதல் வாழ்க்கையை விதி எப்படி பாதிக்கிறது என்பதுதான் படத்தின் சாராம்சம் என்று டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது.

யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார்.