Tamilவிளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி விளையாடுவார் – பிசிசிஐ அறிவிப்பு

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதால் அவர் அதிருப்தியுடன் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் ரோகித் சர்மா- விராட் கோலி இடையே மோதல் போக்கு இருப்பதால் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியதாகவும், ஒருநாள் தொடரை விராட் கோலி புறக்கணிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதனால் இந்திய அணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அணி வீரர்கள் கோஷ்டி மோதல் இல்லாமல் விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்க எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடுவார் என்று பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்து யூகச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.