Tamilசினிமா

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ந்தேதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர்.

ஆனால், ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து நேற்று இரவு வீடு திரும்பினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், நான் நலமுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.