Tamilசெய்திகள்

ஒடிசாவில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பகுதியில் போலீசார் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.