Tamilசெய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர் என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.