அரசு பேருந்தில் ஏற்பட்ட தீ – சென்னையில் பரபரப்பு
கோயம்பேடு அருகே இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் என்ஜினியிலிருந்து புகை கிளம்பியது. இதைக்கண்ட டிரைவர் உடனே பயணிகளை அரசு பேருந்தில் இருந்து இறங்க சொன்னார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் தீ மளமளவென பற்றி எரிந்தது. டிரைவர் பயணிகளை உடனடியாக பேருந்தில் இருந்து இறங்க சொன்னதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
அரசு பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.