‘சந்திரமுகி 2’-வில் நடிக்கும் வடிவேலு?
ரஜினியின் ‘சந்திரமுகி’ 2005–ம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பி.வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு, நயன்தாரா, மாளவிகா உள்பட பலர் நடித்திருந்தனர். இதில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இயக்குனர் பி.வாசு அடுத்ததாக இயக்க உள்ள சந்திரமுகி படத்தின் 2-ம் பாகத்திலும் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் காமெடி முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரமுகி படத்தின் 2-ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.