சொந்தவீடு கட்டப்போகிறீர்களா? அனைத்து ஆலோசனைகளும் இலவசம்! அறிமுகம் செய்கிறது பில்ட் ஈசி நிறுவனம்.
சென்னை, ஆகஸ்ட் 27, 2021: சொந்த வீட்டுக் கனவில் இருப்போருக்குத் தேவையான அனைத்து விதமான ஆலோசனைகளையும் இலவசமாக அளிக்கும் சேவையை சென்னையைச் சேர்ந்த பில்ட் ஈசி நிறுவனம் தொடங்கியுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக இதற்கான சேவை மையத்தை சென்னை அம்பத்தூர் வரதராஜபுரத்தில் அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது.
வாடகை வீடுகளில் வாழ்வோர் சந்திக்கும் சவால்கள் அதிகம். அதிலும் குறிப்பாகப் பெருநகரங்களில் உயர்ந்து வரும் வாடகை, இடநெருக்கடி, மாசுபாடுகள், சுதந்திரமின்மை என்று பெரிய பட்டியலே இருக்கிறது. இதிலிருந்து விடுதலை பெற ஒரே வழி சொந்தவீடு தான்.
ஆனால், சொந்தவீடு என்று வரும்போது ஏகப்பட்ட கேள்விகள் நம் கண்முன்னே நிற்கின்றன. தனிவீடா?வில்லாவா?அடுக்குமாடிக்குடியிருப்பா? நகரத்துக்குள் வீடு இருந்தால் சரியா?’ அல்லது விலை குறைவாக புறநகர்ப் பகுதிகளுக்குப் போய் விடலாமா?நமது பட்ஜெட்டில் எங்கு வீடு/ வீட்டுமனை / அடுக்குமாடிக் குடியிருப்பு கிடைக்கும்? அவற்றை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வரைபட அனுமதி எங்கு வாங்க வேண்டும்? வீடு கட்ட நிதியைத் திரட்டுவது எப்படி? பாதுகாப்பு அம்சங்களை எப்படி உறுதி செய்வது?…என்று இக்கேள்விகள் தனிப் பட்டியலாக இருக்கின்றன.
இவை எல்லாவற்றுக்கும் விடை சொல்லும் ஒரு ஆதரவுக்கரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று அனைவரும் எண்ணுவர். “அந்தக் கரங்கள் எங்களுடையவை” என்கிறார் பில்ட் ஈசி நிறுவனத்தின் சென்னை கிளைத் தலைவர் திரு.ஷர்மா ரவி ராஜ் அவர்கள்.
அவர் பேசும்போது, “புதிதாக வீடு கட்டுவோருக்கு பல ஐயங்கள் எழும். கட்டுமானப் பணியை சொந்தமாகச் செய்வதாக இருந்தாலும் சரி, அல்லது ஒப்பந்தக்காரரிடம் பொறுப்பை ஒப்படைப்பதாக இருந்தாலும் சரி… பல்வேறு விஷயங்களை நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற மனவருத்தங்களும் பொருள் இழப்பும் ஏற்படும். இதனைத் தவிர்ப்பதற்காகவே இலவச ஆலோசனை வழங்கும் சேவையை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். வீட்டு மனை வாங்குவதில் தொடங்கி, புது மனை புகு விழா வரை அனைத்து கட்டங்களிலும் தேவைப்படும் ஆலோசனைகளை இலவசமாக வழங்குவதே எங்கள் நோக்கம் ஆகும். இதற்காக சென்னை அம்பத்தூரில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக, நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களிலும் இரண்டாம் நிலை நகரங்களிலும் இச்சேவை விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
இச்சேவையைப் பெற விரும்புவோர் மூன்று வழிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்:
*தொலைபேசி வழி சேவை (எண்: 730 5448 485)
*சேவை மையத்துக்கு நேரில் வந்து ஆலோசனைகளைப் பெறுதல்
*எமது பில்ட் ஈசி ஊழியர்கள், வாடிக்கையாளரின் இடத்துக்கே சென்று சேவையளித்தல்.
நாட்டிலேயே இது போன்ற சேவையை, இலவசமாக வழங்கும் சேவை தமிழகத்தில் தான் அறிமுகப்படுத்தப்படுகிறது, வீடு கட்ட எண்ணுவோர் பில்ட் ஈசி நிறுவனத்தின் முதல் கிளையான அம்பத்தூர் பில்ட் ஈசி சேவை மையத்தை நாடி, வல்லுனர்களிடம் சிறந்த ஆலோசனைகளை பெறலாம்” என்றார் அவர்.
For more details, contact:
Build Easy
Shop No: 2,
373, MTH Road, Varadharajapuram,
Ambattur
Chennai-600053
Phone Number: 730 5448 485