Tamilவிளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தை இந்தியா முன்னேற்றம்

2019ஆம் ஆண்டு தொடங்கி 2021-ம் ஆண்டு வரை முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.  கடந்த ஜூன் மாதம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. அதன்பின் தற்போது மீண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியுள்ளது.

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிரா செய்யப்பட்டதால் இந்திய அணிக்கு 4 புள்ளிகள் வழங்கப்பட்டது. மொத்தமாக 16 புள்ளிகள் பெற வேண்டிய இந்திய அணிக்கு ஓவர்களை மெதுவாக வீசியதால் இரண்டு புள்ளிகளை இழந்தது. ஐசிசியின் விதிப்படி ஒரு போட்டியில் வென்றால் 12 புள்ளிகளும், போட்டி டையில் முடிந்தால் 6 புள்ளிகளும், டிராவில் முடிந்தால் 4 புள்ளிகளும் ஒவ்வொரு அணிகளுக்கும் வழங்கப்படும்.

14 புள்ளிகள் பெற்று இந்திய அணி முதல் இடத்திலும், 12 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 2 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி நான்காம் இடத்தில் உள்ளது.