கொரோனாவால் பாதிக்கப்பட்ட இலங்கை முன்னாள் அமைச்சர் மரணம்
இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மங்கல சமரவீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.
இம்மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதித்த மங்கல சமரவீரா (65), கொழும்புவில் உள்ள லங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தீவிர தொற்று பாதிப்புக்கு உள்ளான அவர் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரியாக 2005- 2007 மற்றும் 2015-2017 வரை என இருமுறை பதவி வகித்துள்ளார். தாராளவாத ஜனநாயக அரசியலின் ஆதரவாளரான சமரவீரா 1994 முதல் நிதி அமைச்சகம் உள்பட பல்வேறு முக்கிய துறைகளில் பொறுப்பு வகித்துள்ளார். அரசியலில் இருந்து கடந்த ஆண்டு சமரவீரா விலகியது குறிப்பிடத்தக்கது.