Tamilவிளையாட்டு

ஹர்திக் பாண்ட்யா சற்று உடல் எடையை அதிகரிக்க வேண்டும் – சல்மான் பட் கருத்து

இந்திய கிரிகெட்டின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என எதுவாக இருந்தாலும் களத்தில் இறங்கி அசத்தி வந்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20  தொடரின்போது முதுகில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு காயத்தை கருத்தில் கொண்டு பேட்டிங் மட்டும் செய்து வந்தார்.

பந்து வீச்சில் முன்னதாக செயல்பட்டதுபோல் அவரால் செயல்பட முடியவில்லை. பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் மீண்டும் ஜொலிக்க ஹர்திக் பாண்ட்யா  என்ன செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் இடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

ஹர்திக் பாண்ட்யாவின் முக்கிய பிரச்சினை அவர் ஒல்லியாக இருப்பதுதான். அறுவை சிகிச்சைக்குப்பின் பந்து வீச்சால் கூடுதல் சுமையை அவரது உடலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஹர்திக் பாண்ட்யா உடலை சற்று பருமனாக்க வேண்டும்.

இந்தியா அவர் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால், அவர் நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்ததால். பேட்டிங்கில் அவர் சிறப்பாக தெரிகிறார். அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன் பந்து வீச்சில் போதுமான வேகத்துடன் செயல்திறன் கொண்டவராக இருந்தார். கூடுதலாக முயற்சி மேற்கொள்வதற்கு அவர் ஒல்லியாக இருப்பது தடையாக உள்ளது.

இவ்வாறு சல்மான் பட் தெரிவித்தார்.