டி20 உலகக்கோப்பை அணியில் இவரை சேர்க்க வேண்டும் – தினேஷ் கார்த்திக் கருத்து
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும். இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சமியுடன் உலகக்கோப்பை தொடரில் பங்குபெறும் இந்திய அணி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘நடக்க இருக்கிற டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கண்டிப்பாக வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும். வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சில் ஒரு தனித்துவம் இருக்கிறது. அவருடைய திறமையில் ஒரு வெற்றி ஒளி தெரிகிறது. அவர் நிச்சயமாக இந்திய அணிக்கு மிகச் சிறந்தவராக இருப்பார். வருண் சக்கரவர்த்தி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார். இந்திய அணி தொடரில் முன்னோக்கிச் செல்ல முக்கிய பங்காற்றுபவராக இருப்பார். அவரது பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்’’ என்றார்.
மேலும், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதை விரும்புகிறேன்’’ என்றார்.