நயன்தாரா படத்தின் இயக்குநருக்கு திருமணம்!
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது.
இப்படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் தனது தோழியும் காதலியுமான அறிவுநிலாவை திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டார் தரப்பில் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்துவரும் நிலையில் கோவையில் மிக எளிமையாக நண்பர்கள் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்கள் திருமணத்தை இயக்குனர் ராம் முன்னிலை வகித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்துள்ளார்.