Tamilசினிமா

‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படப்பிடிப்பு முடிந்தது – விரைவில் சென்னை திரும்பும் தனுஷ்

ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘தி கிரே மேன்’. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘தி கிரே மேன்’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் தனுஷ், அங்கு ஒரு மாதம் சண்டை பயிற்சி பெற்று, பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டு வாரம் அமெரிக்காவில் ஓய்வெடுக்க உள்ள தனுஷ், அதன்பின் சென்னை திரும்ப உள்ளாராம்.