மக்களுக்காகத்தான் அரசு என்பதை மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளார் – வைகோ பாராட்டு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மணிமேகலை காப்பியத்தில், கையில் அமுத சுரபியுடன் காணார், கேளார், பேசார் போன்ற ஆதரவற்றவர்களுக்கு அள்ளி வழங்கியதைப் போல, தமிழக அரசே அமுத சுரபியாக ஆகி விட்டது. மக்களுக்காகத்தான் அரசு என்பதை நிரூபித்துள்ளது.
மனித நேயத்தின் மறுபதிப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது என்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.