விஜய் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கும் வித்யூத் ஜமால்?
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.
இப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால் வில்லனாக நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இதனை நடிகர் வித்யூத் ஜமால் மறுத்துள்ளார். மேலும் விஜய்யுடன் நடிக்க ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என துப்பாக்கி பட பாணியில் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் வித்யூத் ஜமால், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.