Tamilசெய்திகள்

அரசியல் கூட்டங்களால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அரசியல் கூட்டங்களால், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

* அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வோர் மாஸ்க் அணிவதில்லை.

* மாஸ்க் அணிய தொண்டர்களுக்கு கட்சிகள் அறிவுறுத்த வேண்டும்.

* தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்பட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக்கூடும்.

* சென்னை, தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

* சென்னையில் கடந்தாண்டு கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த இடங்களில் தற்போது குறைவாக உள்ளது.

* கொரோனா உறுதியானால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

* அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

* தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு போடப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.