புரோ கபடி லீக் – புனேரி பல்டனை வீழ்த்தி பெங்களூர் டைடன்ஸ் வெற்றி
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ் அணியும், புனேரி பல்டன் அணியும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயெ தெலுங்கு டைடன்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 11 – 17 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைடன்ஸ் அணி முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் தெலுங்கு டைடன்ஸ் அணி துடிப்பாக விளையாடியது. புனேரி பல்டன் அணியும் சளைக்காமல் புள்ளிகளை எடுத்தது.
இறுதியில், பரபரப்பான கட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ் அணி 28 – 25 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பல்டன் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் தெலுங்கு டைடன்ஸ் அணி ஐந்தாவது வெற்றியை பெற்றது.