Tamilவிளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – போட்டி தேதியில் மாற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் 8 முன்னணி அணிகள் 2019-ம் ஆண்டு முதல் 2021 வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சாம்பியன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்.

இறுதிப் போட்டி இங்கிலந்து லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 10-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது.

தற்போதைய நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. இந்தியா இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்காவையும் எதிர்த்து விளையாட இருக்கிறது.

இந்தத் தொடருக்குப்பின் இந்தியா எப்படியும் முதல் இரண்டு இடங்களில் ஒன்றை பிடிக்கும். இந்தியாவில் ஐபிஎல் போட்டி ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் முடிவடைய வாய்ப்புள்ளது.

இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோரன்டைன் காலம் கடைபிடிக்க வேண்டும். இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரை முடித்துக்கொண்டு கோரன்னைடைன் காலத்தை முடிக்க வேண்டும். ஆகையால் ஜூன் மாதம் 15-ந்தேதிக்குப்பின் இறுதிப் போட்டியை வைத்தால்தான் சரியாக இருக்கும்.

இதை கணக்கில் கொண்டு ஐசிசி, ஜூன் 18-ந்தேதி முதல் ஜூன் 22-ந்தேதிக்கு போட்டியை ஒத்திவைத்துள்ளது. ஜூன் 23-ந்தேதியை ரிசர்வ் டே-வாக அறிவித்துள்ளது.