Tamilசினிமா

கன்னட சினிமா நடிகை ஜெயஸ்ரீ ராமையா தற்கொலை

கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். மேலும் கன்னட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதமே, இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ”I quit. Goodbye to this world and depression” என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாக, அவர் அந்த பதிவை நீக்கம் செய்தார்.

மேலும் பப்ளிசிட்டிக்காக இப்படி பதிவிடவில்லை என்றும், உண்மையிலேயே தான் மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பதாகவும் அவர் பேஸ்புக் நேரலையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.