Tamilசெய்திகள்

தேசிய பெண் குழந்தைகள் தினம் – பெண் குழந்தைகளை பாராட்டிய பிரதமர் மோடி

இந்தியாவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் முயற்சியால், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 24-ந் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண் குழந்தைகளை பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டி டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டார்.

அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள தேசத்தின் மகள்களுக்கு வணக்கம் செலுத்துவோம்.

பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் வழங்குவதை கவனத்தில் கொண்டு, அவர்கள் கல்வி பெறவும், சிறந்த சுகாதார பாதுகாப்பு கிடைக்கவும், பாலின உணர்திறனை மேம்படுத்தவும், இன்னும் இது போன்றவற்றுக்காகவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கும், அவர்கள் கண்ணியமும், வாய்ப்பும் நிறைந்த வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதற்கும் உழைக்கும் அனைவரையும் சிறப்பாக பாராட்டுவதற்கான நாள் இது.

இவ்வாறு அவற்றில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.