Tamilசெய்திகள்

குஜராத்தில் கொடூரம் – சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி 13 பேர் பலி

குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா என்ற இடத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்துள்ளனர்கள். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடும்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதாக கூறப்படுகிறது.