பொள்ளாச்சி சென்ற கனிமொழி எம்.பி தடுத்து நிறுத்திய போலீஸ்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள பொள்ளாச்சி நோக்கி சென்ற கனிமொழி எம்.பி. கார் கோவை ஈச்சனாரி அருகே தடுத்து நிறுத்தப்பட்டது.
போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் கனிமொழி எம்.பி. மற்றும் தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.