Tamilசெய்திகள்

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெண்ட் இன்று விண்ணில் பாய்கிறது

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் இன்று (வியாழக்கிழமை) மாலை வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது.

கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்குத் தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. இது இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 25 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு திட்டமிட்டபடி இன்று மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது. மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.