போஸ்டரில் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி புகைப்படம் இடம்பெற கூடாது – ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், வரும் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். ரஜினி தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பை அடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
ரஜினி புகைப்படத்துடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.