இளைஞர்களின் எழுச்சிக்காக பாடல் வெளியிட்ட விஜயகாந்த்
இளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன்.
இந்தப் பாடலுக்கு ஜெஃப்ரி இசையமைத்துள்ளார். இப்பாடலைப் பற்றி விஜய பிரபாகரன் கூறுகையில்..
தமிழை என்னுயிர் என்பேன் நான்…தமிழ் இளைஞர்கள் எல்லோரும் என் உயிர் தோழர்கள் ஆவார்கள் என்றவர், இந்த பாடல் முழுக்க முழுக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தப் பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.